Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜனவரி 10 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
Prionailurus viverrinus என்கிற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்தது என நம்பப்படும் அரிய வகை புலியின் உடலம் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில் வெள்ளிக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளது.
THE FISHING CAT என அழைக்கப்படும் மீன்பிடி பூனை(அரிய வகை புலி) என அழைக்கப்படுவதுடன் மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள் நுழைந்து மீன் உட்பட கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு சிக்கி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோட்டைக்கல்லாறு பிரதான வீதியில் மீட்கப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளமான புலியின் உடலம் விபத்து சம்பவத்தினால் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா? அல்லது யாராவது தாக்கி கொல்லப்பட்டதா? என்ற விசாரணைகளை வன வன ஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காட்டுப் பூனை என அழைக்கப்படும் இப்புலியை சுற்றி மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அண்மைக்காலமாக அப்பகுதியில் உள்ள கோழிகளை வேட்டையாடி வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதுடன் இதே போன்று அண்மையில் கோட்டைக்கல்லாறு பாலம் அருகிலும் புலியின் உடலம் ஒன்றும் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டனர்.
மீன்பிடி பூனைகள் சற்று பெரிய பூனைகள் ஆகும். இவை வீட்டுப் பூனைகளைவிட இரண்டு மடங்கு பெரியது ஆகும். இது பழுப்பு நிறம் கலந்த சாம்பல் நிறத்தில் உடலும், அதில் கரும் புள்ளிகளும், குறுகிய வாலும் உண்டு. இதன் கன்னத்தில் ஒரு சோடி பட்டைகள் காணப்படும். நெற்றிப் பகுதியில் ஆறு முதல் எட்டு வரையிலான கரும் கோடுகள் இதன் தனித்த அடையாளம் ஆகும். கருப்பு நிற கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய ஆழமான மஞ்சள்-சாம்பல் நிற ரோமங்களை கொண்டிருக்கும்.22 முதல் 31 அங்குலம் வரை வளரக்கூடியது .
பெரும்பாலும் ஈர நிலங்களுக்கு அருகில், ஆறுகள், நீரோடைகள், சதுப்பு நிலங்களில் வாழ்கிறது.அங்கு அது பெரும்பாலும் மீன்கள்,பறவைகள், பூச்சிகள், சிறிய விலங்குகள் பாம்புகள் உள்ளிட்ட ஊர்வனங்கள் வேட்டையாடக் கூடியது.மீன்பிடி பூனை இரவு நேரங்களில் வெளியில் அதிகம் நடமாடக் கூடியது. இது நல்ல முறையில் நீந்தி நீருக்கடியில் கூட நீண்ட தூரம் செல்லக்கூடியது.
இந்த மீன்பிடிப் பூனை இலங்கையில் கொடுப்புலி என அழைக்கப்படுவதுடன் ஒரு நடுத்தர காட்டுப்பூனையாக குறிப்பிடப்படுகிறது.இது தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. கடந்த காலங்களில் இம்மாவட்ட பொதுமக்கள் சிலர் குறித்த அரிய வகை புலி போன்ற பூனை இனங்களை பிடித்துள்ளதுடன் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவமும் இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
மீன்பிடி பூனைகள் இரவு வாழ்க்கையுள்ள விலங்காகும். இரவு நேரங்களில் (நள்ளிரவில்) மீன்கள் பிடிக்க நீர் நிலைகளை நோக்கி வரும்போது வேகமாகவும், கவனிக்காமல் வரும் சாரதிகளால் இந்த பூனைகள் கொல்லப்படுகின்றன. சமீபகாலமாக வீதிக் கொலைகளால் அல்லது வாகன மோதல்களால் கொல்லப்படும் மீன் பிடிக்கும் பூனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.Prionailurus viverrinus என்ற விலங்கியல் பெயர் கொண்ட மீன் பிடிக்கும் பூனையானது (Fishing Cat) தென்னாசியா, தென்கிழக்காசியாவில் காணப்படும் காட்டு பூனை இனங்களில் ஒன்றாகும். இலங்கையில் பல இடங்களில் பரவிக் காணப்பட்டாலும், இந்த பூனை இனங்கள் வன்னி, யாழ்ப்பாணம் போன்ற வட மாகாண பகுதிகளில் காணப்படுவதில்லை என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை, இது அழிவின் ஆபத்திலிருக்கும் விலங்காகும்
30 Aug 2025
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Aug 2025
30 Aug 2025