Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 29 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித கடத்தல் தினம் ஜூலை 30ம் திகதியை நினைவு கூறுவதற்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பில் செவ்வாய்க்கிழமை (29) இடம் பெற்றது.
"மனித கடத்தல் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் - சுரண்டலை முடிவுக்கு கொண்டு வருவோம்" எனும் இவ் ஆண்டிற்கான தொனிப்பொருளில் இடம் பெற்றது.
மட்டக்களப்பில் உலக மனித விற்பனைக்கு எதிரான தின நிகழ்வுகள் இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தின் (MIC) ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக நியூசிலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் கேப்ரியலா ஐசாக், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் மற்றும் நியூசிலாந்து தூதுவராலய உயர் அதிகாரி பிரஷ்சி கலந்து கொண்டனர்.
மனித கடத்தல், மனித வியாபாரம், சட்டவிரோத புலம்பெயர்தல், கடல்வழியாக ஆட்கடத்தல், போன்ற பாதுகாப்பற்ற சட்டவிரோத பயணங்களால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்றி இதன் போது விரிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டது.
இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தினரினால் (ICMPD) அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நியூசிலாந்து நாட்டின் நிதி உதவியின் கீழ் இந் நிகழ்வு இடம் பெற்றன.
இந் நிகழ்வில் பிரதி பொலிஸ் மா அதிபர் நுவான் மெண்டிஸ், வெளிநாட்டு அலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் கே.நிகரில்காந்த், பிரதேச செயலாளர்கள், .பொலிஸ் அத்தியட்சகர் லீலரத்ன, இடம் பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சமீர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .