2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மியான்குளம் பிரதான வீதியில் விபத்து; நான்கு பேர் காயம்

R.Tharaniya   / 2025 ஜூன் 22 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மியான்குளம் பிரதான வீதியில் இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (20) அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த ஓட்டமாவடி இளைஞர்பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா, ஓட்டமாவடி பிரதேசசபை பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எஸ்.எம்.நெளபர் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த இருவர் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த அனைவரும் வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகசிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .