2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மீன் பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மீன் பிடி உபகரணங்கள் நேற்று முன்தினம் (18) முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் காக்காமுனைப் பிரதேசத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 24 மீனவர்களுக்கு வள்ளம் வலை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ்,கிராம உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,முஸ்லிம் எயிட் நிறுவன உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .