R.Tharaniya / 2025 ஜூன் 23 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை திருமண மண்டப வீதியில் யானையின் தாக்குதலுக்குள்ளான நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று இடம்பெற்றுள்ளது.
யானையின் தாக்குதலுக்கான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்து காணப்படுவதுடன், பொதுமக்கள் இரவு நேரங்களில் தங்களது அவசரத் தேவை கருதி வெளிச் செல்ல முடியாத நிலையில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து காட்டு யானைகள் குடியிருப்புக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .