2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ரயிலுடன் கார் மோதி விபத்து

Editorial   / 2025 ஜூன் 18 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் உள்ள ரயில் கடவையில் கார் ஒன்று ரயிலுடன் மோதுண்ட நிலையில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கூழாவடியில் உள்ள ரயில் கடவையில் ரயில் செல்லும் நேரத்தில் மூடப்படாத நிலையில் அதன் ஊடாக கடக்க முனைந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

இதன்போது காரை செலுத்திச்சென்றவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில் கடவையில் கடமையாற்றும் ரயில் கடவையாளர் இன்மையினால் தொடர்ச்சியாக கடவை ஊடாக பயணிப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.

இது தொடர்பில் பல தடவைகள் ஊடகங்கள் வாயிலாக கொண்டுவரப்பட்டபோதிலும் இதுவரையில் நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X