2025 நவம்பர் 19, புதன்கிழமை

வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

R.Tharaniya   / 2025 மே 12 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு காத்தான்குடியில் வர்த்தக நிலையமொன்றின்‌ மீதுஞாயிற்றுக்கிழமை (11) அன்று இரவு ஏற்பட்ட தீப்பரவலினால் குறித்த வர்த்தக நிலையத்தின் உட்பகுதி எரிந்து சேதமடைந்துள்ளது.

புதிய காத்தான்குடி பெளஸி மாவத்தை(ரெலிகொம்) வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தின் மீது இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து காத்தான்குடி நகரசபை தீஅணைக்கும் இயந்திரம் மட்டக்களப்பு மாநகரசபையின் தீ அணைக்கும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பொதுமக்களளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டு  கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

பிரபல வர்த்தகரான நசீலாஅக்பர்ஹாஜியாருக்கு சொந்தமான இந்தவர்த்தக நிலையத்திற்கு ஐம்பது இலட்சம் ரூபாய் நஷ்டம்இந்த தீப் பரவலினால் ஏற்பட்டுள்ளது தீப்பரவலுக்கான காரணங்கள் குறித்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எம் .எஸ். எம் .நூர்தீன் 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X