2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வாளொன்றை உடமையில் வைத்திருந்தவர் கைது

Janu   / 2025 பெப்ரவரி 24 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாள் ஒன்றை உடமையில் மறைத்து வைத்திருந்த நபர் ஒருவர் சம்மாந்துறை பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை பெருங்குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 39 வயதுடைய சந்தேக நபர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சென்னல் கிராமம் 02 பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் 2 அரை அடி நீளமான   வாள் ஒன்றும்  சந்தேக நபர் வசம் இருந்து  மீட்கப்பட்டுள்ளது.

மேலும்  சந்தேக நபர்,  சான்று பொருள்களுடன் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பாறுக் ஷிஹான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X