Freelancer / 2023 ஜனவரி 13 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கல்முனை உவெஸ்லி பாடசாலையைத் தளமாக கொண்டு 1982இல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம், 40ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட தொடர் நிகழ்வு நேற்று (12) கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள இந்நிகழ்வுகளை சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக, நேற்று டீ சேட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந் நிகழ்வைத் தொடர்ந்து 'நோய் அற்ற வாழ்வே குறையற்ற செல்வம்' எனும் தொனிப்பொருளை உயிர்பிக்கும் வகையில், சைக்கிள் மெல்லொட்ட நிகழ்வு நடைபெற்றது.
கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும் தற்போதைய தவிசாளருமான ஏ.எம் றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர மேயர் ஏ. எம். றகீப், கௌரவ அதிதியாக டொக்டர் ஜெமீல் முஹம்மட் றிஸான், விசேட அதிதியாக கல்முனை தலைமையக பொலிஸ் பரிசோதகர் எம். ரம்ஷீன் பக்கீர், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ வாஹிட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026