Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 08 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில் சனிக்கிழமை (07) அன்று புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதை ஓட்டிய சந்தேக நபர்களை பொலிஸார் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறித்த சோதனை நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் தலைமையிலான பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ள பட்டதோடு பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் என்பன சட்ட நடவடிக்கைக்கு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சுமார் 10 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்தது டன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago