Janu / 2025 ஜூன் 10 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிந்தவூரில் 2ஆம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு திங்கட்கிழமை (9) இடம்பெற்றது .
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவருமான ஏ. ஆதம்பாவா இந்த வீடுகளுக்கான அடி கல்லை நட்டு வைத்தார்.
இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களான எம். எல். சம்சுன், அலி. ஏ இப்திகார் அஹமட், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஆசிரியர் எஸ். எம். ஆரிப் , , தேசிய மக்கள் சக்தியின் செயற்பட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் , அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுவின் தலைவருமான ஏ .ஆதம்பாவா எம். பி யின் முயற்சியால் இந்த வீடுகள் தலா பத்து லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்

30 minute ago
37 minute ago
46 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
37 minute ago
46 minute ago
47 minute ago