2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

வெல்லாவெளியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

R.Tharaniya   / 2025 மே 29 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்திக்கு அருகில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் புதன்கிழமை (28) அன்று மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பிளாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன்(கண்ணன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் செவ்வாய்க்கிழமை (27) அன்று இரவு அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி அன்னமலை பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் சம்பவதினமான புதன்கிழமை (28) அன்று வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு வீதியில் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

இதையடுத்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

க.விஜயரெத்தினம்

கனகராசா சரவணன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .