2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வைத்தியசாலையில் குருதிக்குத் தட்டுப்பாடு

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்குத்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இரத்த தானம் செய்ய முன்வருமாறு பொது மக்களை வைத்தியசாலை இரத்த வங்கிப் பொறுப்பாளர் வைத்தியர் கந்தசாமி கிருஷானந் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தனின் 46 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இரத்தானம் வழங்கும் நிகழ்வு கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையானது கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலை ஆகும். இங்கு பொலநறுவை தொடக்கம் அம்பாறை பொத்துவில் வரையிலான அதிகளவான நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர். 

இந்நிலையில் நாள்  ஒன்றுக்கு 30 தொடக்கம் 35 பைந் இரத்தம் தேவைப்படுகின்றது. அதேவேளை எமது பிரிவின் கீழ் உள்ள களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளுக்கு எமது பிரிவின் ஊடாக இரத்தம் வழங்கப்படுகின்றது. 

இருந்தபோதிலும் தற்போது கொரோனா காரணமாக இரத்தம் பெறுவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. எனவே பொதுமக்களை இரத்த தானம் வழங்குமாறும் அல்லது இரத்த தான முகாங்களை ஒழுங்கு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .