Editorial / 2025 ஜூன் 15 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் (13) வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிறைந்துறைச்சேனை 2 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடொன்றில் கணவனும், மனைவியும் இணைந்து சூட்சுமமான முறையில் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதனை அவதானித்த பிரதேச பொதுமக்கள் அன்றைய தினம் போதைப்பொருள் வாங்க வந்த நபரை மடக்கிப் பிடித்ததுடன், வீட்டில் இருந்த கணவனும், மனைவியும் வீட்டை விட்டு தப்பிச் செல்லாத வகையில் வீட்டு நுழைவாயிலுக்கு பூட்டுப் போட்டு அவர்களை சுமார் 10 மணித்தியாலயமாக முற்றுகையிட்டனர்.
இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்ததக்கமைய பொலிஸார் நீதிமன்ற அனுமதியுடன் சம்பவ இடத்துக்கு வந்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த பிரதேச மக்கள், சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .