Editorial / 2025 ஜூன் 12 , பி.ப. 01:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

கஜானா சந்திரபோஸ்
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 'கிழக்கின் கவிக்கோர்வை' தொகுப்பு நூல் அறிமுக விழா, கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை(10) சிறப்பாக நடைபெற்றது.
பண்பாட்டலுவல்கள் திணைக்கள கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக சுஜாதா குலேந்திரகுமார் (மேலதிக செயலாளர் கொள்கை திட்டமிடல் மற்றும் செயல்திறன் மீளாய்வு) கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்ல) கலந்து சிறப்பித்தார்.
கௌரவ விருந்தினர்களாக ரி.ஜே.அதிசயராஜ் (பிரதேச செயலாளர் கல்முனை வடக்கு), ஆர்.இளங்குமுதன் (மாகாணப் பணிப்பாளர் கிராமிய அபிவிருத்தி திணைக்களம்) மற்றும் சிறப்பு விருந்தினர்களாக உமா வரதராஜன் (சிரேஷ்ட எழுத்தாளர்), கவிஞர் சோலைக்கிளி (சிரேஷ்ட எழுத்தாளர்), அப்துல் ரசாக் (மொழித்துறை விரிவுரையாளர் இலக்கியவியலாளர்கள் எழுத்தாளர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாணத்தில் இருந்து பெருமளவான கவிஞர்கள் கலந்து கொண்டமை ஒரு சிறப்பம்சமாக அமைந்தது.
'கிழக்கின் கவிக்கோர்வை' எனும் கவிதை நூலிலே 332 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்களது கவிதை படைப்புகள் உள்ளடங்கிய ஒரு நூலாக இது அமைய பெற்றிருப்பதும் வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வாக இதனை குறிப்பிடலாம்.
கிழக்கு மாகாணத்தில் உருவான எல்லா கவிஞர்களது கவிதைகளையும் கோர்த்து அதனை புதுமை ஏற்படுத்தி இந்த மாகாணத்தின் புகழைப் பரப்பிட வேண்டும் என்ற அவாவில் ஆயிரம் கவிதைகளை ஆவது கொண்டதொரு தொகுப்பாக இதனை கோர்த்திடவே கிழக்கு மாகாண பணிப்பாளரது முயற்சி இருந்தது, அதற்கான தேடல்கள் தொடர்ந்தாலும் கால நேரம் அந்த தேடலுக்கு ஒரு காற் புள்ளியை இட்டு இருக்கிறது.
இருந்தாலும், 332 கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கவிஞர்களது கவிதைத் தொகுப்பை வெளியிட்டதில் கிழக்கு மாகாணம் பெருமை கொள்கின்றது.











33 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago