2021 மே 14, வெள்ளிக்கிழமை

தொடை காட்டுவது பிரியங்காவின் குடும்பப் பழக்கமாம்

George   / 2017 ஜூன் 01 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய பிரதமர் நரேந்திரமோடியை அண்மையில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில், பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா சந்தித்து பேசினார் என்ற செய்தியை ஏற்கெனவே பார்த்தோம். இதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

அவற்றில் ஒரு புகைப்படம் பிரியங்காவின் தொடை தெரியும்படி இருந்ததாகவும், ஒரு நாட்டின் பிரதமர் முன் பிரியங்கா இதுபோன்று மரியாதையில்லாத வகையில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு தொடை தெரியும்படி உட்காரலாமா? என்றும் பலர் டுவிட்டரில் கேள்வி எழுப்பினர்

தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று பிரியங்கா சோப்ரா தனது தாயாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் பிரியங்காவும் அவருடைய தாயாரும் தொடை தெரியும் வகையில் உடை அணிந்து உட்கார்ந்துள்ளனர்.

இந்த பதிவில் இது எங்கள் ஜீனிலேயே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். பிரியங்காவின் இந்த பதிலடியை ஒருசிலர் இரசித்தும், ஒருசிலர், கண்டனம் தெரிவித்தும் கருத்து பதிவு செய்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .