2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

விக்ரமுக்கு 'ஸ்கெட்ச்' போடும் மலையாள வில்லன்

George   / 2017 மே 29 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்டவர் பாபுராஜ்.

மலையாள சினிமாவில் அக்கிரமம் செய்யும் பொலிஸ் அதிகாரி என்றால், “கூப்பிடு பாபுராஜை” என்கிற அளவுக்கு அதிக அளவில், பொலிஸ் வேடங்களில்  நடித்தவர்.

கடந்த சில வருடங்களாக குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வரும் இவருக் தற்போது தமிழில்  அழைப்பு வந்துள்ளது.

“வாலு” விஜயசந்தர், விக்ரமை வைத்து இயக்கிவரும் “ஸ்கெட்ச்” திரைப்படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வருகிறார் பாபுராஜ்.

இதற்குமுன், அதாவது 13 வருடங்களுக்கு முன் தமிழில் அஜீத்தை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்கிய “ஜனா” திரைப்படத்தில் பாபுராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .