2021 ஜூன் 19, சனிக்கிழமை

பிரபுதேவா என் வழிகாட்டி: ஹன்சிகா

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 04 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் நடிகர்களுக்கும் விருந்துகொடுத்து பரபரப்பை ஏற்படுத்திய 'வேலாயுதம்' நாயகி ஹன்சிகா இப்பொழுது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

பிரபுதேவாவின் படத்தில் நடித்துவரும் ஹன்சிகா, 'எனக்கு பிரபுதேவாதான் வழிகாட்டி... அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என்று சொல்லித்திரிகிறாராம். இதனால் கடுப்பாகியிருக்கிறார் நயன்தாரா.

தன்னுடைய சினிமா அனுபவம் பற்றி ஹன்சிகா குறிப்பிடும்போது… ‘தெலுங்கிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்திருந்தாலும் எனக்கு நிறைய தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். இத்தனைக்கும் நான் நடித்த ஒரு தமிழ் படம்கூட வெளிவரவில்லை. தமிழ் ஹீரோக்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். பிரபுதேவா எனக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார்…’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஹன்சிகா நடித்த படங்களே வெளிவராத நிலையில் அடிக்கடி பேசப்படுகின்ற நடிகையாக அவர் மாறியிருப்பதால் தமிழ் திரையுலக நாயகிகள் மிகவும் உசாராகிவிட்டார்களாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .