2021 ஜூன் 19, சனிக்கிழமை

எந்திரனாகிய அலக்ஸ் மார்டின்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஹொலிவூட் படங்களுக்கு சவால்விடும் வகையில் உருவாகியிருக்கும் தமிழ் படம் 'எந்திரன்' என எல்லோராலும் பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கையில், அண்மையில் இத்திரைப்படத்தின் 'ட்ரெய்லர்' காட்சிகள் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அதனைப் பார்த்தவர்கள் வாய்பிளந்து வியக்கிறார்கள். நமது சூப்பர் ஸ்டாரா இப்படி சண்டை போடுகிறார் என மெய் மறந்து போயிருக்கிறார்கள் ரசிகர்கள்.

அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் எந்திரனை உருவாக்கியிருக்கிறார் ஷங்கர். இதற்காக பல வருடங்கள் அயராது உழைத்திருக்கிறார். அவரது உழைப்புக்கு உரம்போட்டவர்கள் பலர். அதில் முக்கியமானவர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள். அந்த கலைஞர்களின் ஈடுபாட்டுக்கு இணை சேர்க்கின்ற நடிகராக ரஜனிகாந்த் தோன்றியிருக்கிறார். தொழில்நுட்பக் கலைஞர்களின் ஆட்டுவிப்புக்கு ஈடுகொடுத்து ரஜனி நடித்திருப்பது பாராட்டத்தக்கதுதான்.

ஆனால் எல்லா இடங்களிலும் அவரால் ஈடுகொடுக்க முடியவில்லை. குறிப்பாக பிரமாண்டமான சண்டை காட்சிகளில் அசுரத்தனமாக மோதும் அளவுக்கு ரஜனியின் வயது இடம்கொடுக்காது என்பது அனைவரும் தெரிந்ததே. ஆகையினால்தான் ரஜனிக்கு 'டூப்' போடுவதற்காக அலக்ஸ் மார்டினை அழைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ஹொலிவூட்டில் பல படங்களில் தனது திறமையினை வெளிப்படுத்திய அலக்ஸ், தமிழில் அறிமுகமாகும் முதல் படம்தான் எந்திரன். ஆனால் அது ரஜனியின் நிழலாக. அசுரத்தனமான சண்டைகளை மிகவும் லாவகமாக கையாண்டிருக்கிறார் அலக்ஸ். பலருடைய திறமைகளை ஒன்றிணைத்து எந்திரன் உருவாகியிருப்பதால் உலகின் பார்வை இப்பொழுது இந்திய சினிமாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.

சுமார் 3000 திரையரங்குகளில் உலகளாவிய ரீதியில் வெளியாகவிருக்கிறது எந்திரன். இம்மாதம் 24ஆம் திகதி எந்திரன் திரைப்படம் உலகளாவிய ரீதியில் வெளியாகவிருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.


  Comments - 0

  • Baskaran Monday, 13 September 2010 08:38 PM

    ஏமாத்திப்புட்டாங்களேயா!..!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .