2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

கவர்ச்சி என் உடம்புக்கு சரிவருமா?

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கவர்ச்சியாக நடிப்பதற்கு என் உடல்வாகு சரியாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது. இந்த சந்தேகத்தினை நிவர்த்திசெய்கின்ற இயக்குநர்கள் கிடைத்தால் நிச்சயமாக கவர்ச்சியாக நடிப்பதுபற்றி சிந்திப்பேன் என வளர்ந்துவரும் நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.

அசின் மாதிரி இருக்கிறாய் என்று எல்லோரும் சொல்வதால் ஆரம்பத்தில் சந்தோஷமடைந்த பூர்ணா, இப்பொழுது வருத்தப்பட தொடங்கியிருக்கிறார். ''எனக்கென தனி முத்திரை பதிக்கவே விரும்புகிறேன். எல்லோரும் என்னை அசின்போல இருக்கிறாய் என்று கூறுகிறார்கள். வெளியிடங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ளச் சென்றால் அசின் வந்திருக்கிறார் என என்னை பார்க்க ஓடிவருகிறார்கள். என்னிடம் அசின் என்று நினைத்து ஓட்டோகிராபும் வாங்குகிறார்கள். இவை ஆரம்பத்தில் எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. ஆனாலும் நான் நானாகவே இருக்க விரும்புகின்றேன். நாளை வருகிறவர்கள் பூர்ணா மாதிரி நடிக்க வேண்டும் என்று சொல்வதையே பெரிதும் விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளில்தான் இப்பொழுது ஈடுபட்டுவருகிறேன்'' என்று குறிப்பிட்டார் நடிகை பூர்ணா.

சிறுவயதிலிருந்தே நடனத்தை விரும்பும் பூர்ணா, நடனத்தை மையமாக வைத்து கதை உருவாக்கும் இயக்குநர்களுக்கு முன்னுரிமை கொடுக்க தயாராவிருக்கிறாராம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .