Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 மார்ச் 24 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறுகிய காலத்தில் அதிகம் சாதித்துவிட்ட நடிகர் கார்த்தி தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். இரண்டொரு படங்களிலேயே ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டவர் கார்த்தி. தனது குறும்புத்தனமான நடிப்பில் ஏராளமான ரசிகர்கள் தன்வசப்படுத்திய பெருமை கார்த்தியை சாரும்.
அதேபோல் குறுகிய காலத்தில் நல்ல இயக்குநர் என்ற பெயரினை தட்டிச்சென்ற இயக்குநர் ராஜேஸ் என்றால் அது மிகையாகாது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களை எளிதில் மறந்துவிடமுடியாது. மக்கள் மனதில் எளிதாக ஊடுருவிய படங்களிவை.
ராஜேஸ் தற்சமயம் 'ஒருகல் ஒரு கண்ணாடி' படத்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார். அதேபோல் கார்த்தியும் மற்றுமொரு படத்தில் நடித்துவருகிறார். இந்த இருவரது படங்களும் முடிந்தபின்னர் இணைந்து ஒரு படத்தில் வேலைசெய்ய இருக்கிறார்கள் என்ற நம்பகரமான செய்தி கோடம்பாக்கத்தில் நிலவுகிறது.
ராஜேஸின் இயக்கத்தில் 'காகித கப்பல்' என்ற படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்று பரவலாக செய்திகள் அடிபடுகின்றன. இவ்வருடத்தின் இறுதியில் காகித கப்பல் தயாராகத் தொடங்கிவிடுமாம். சுருக்கமாக இப்படத்தினை 'கேகே' என்று அழைப்பார்களாம்.
இரண்டு கெட்டிக்காரர்களும் சேர்ந்து இனிமையான திரைப்படத்தினை வழங்க தயாராகிவிட்டார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் படம் எப்படி வருகிறதென்று.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago