2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

பைத்தியக்கார தந்தையுடன் சிநேகா...

A.P.Mathan   / 2011 மார்ச் 28 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மும்பாயில் பிரபலமான நடிகைகளை தமிழ் சினிமாவில் நடிக்க வைத்த காலங்கள் மலையேறி - இப்பொழுது தமிழ் சினிமா நடிகைகளை ஹிந்தி திரையுலகம் இழுத்துக்கொள்கின்ற நிலை வந்திருக்கிறது.

அந்தவகையில் புதிதாக ஹிந்தி திரையுலகில் காலடி எடுத்துவைக்கவிருக்கும் நடிகை சிநேகா. தன்னுடைய புன்னகையினால் ரசிகர்கள் மனதினை கொள்ளைகொண்ட சிநேகா தற்சமயம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கின்றார். கவர்ச்சி திரையுலகாக திகழ்கின்ற பொலிவூட்டில் சிநேகாவின் புன்னகை இடம்பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஹிந்தி திரையுலகில் அதிகம் பேசப்படுகின்ற ரேவதி வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் 'மாட் டாட்' (பைத்திய தந்தை) என்னும் படத்திலேயே சிநேகா நடிக்கவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இப்படம் 80ஆம் ஆண்டின் பின்னயில் உருவாக்கப்படவிருக்கிறது. இப்படத்தில் நஸீருடீன் ஷாவின் மலைவியாக சிநேகா நடிக்கவுள்ளார். இவரது மகளாக பிரபல ஹிந்தி நட்சத்திரம் ஆயிஷா டேகியா நடிக்கின்றார். சிநேகாவுடன் சேர்ந்து நடிப்பது தொடர்பாக ஆயிஷா குறிப்பிடுகையில்... 'இது எனக்கு மிகவும் சவாலான பாத்திரம். சிறந்த, அனுபவமுள்ள நடிகையுடன் சேர்ந்து நடிக்கவுள்ளதான் இந்த படத்தினை நான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்...' என்று குறிப்பிட்டுள்ளார்.

'மாட் டாட்' படத்தில் நடிப்பதற்கு சிநேகாவை தெரிவு செய்தமை தொடர்பாக படத்தின் இயக்குநர் ரேவதி வர்மா குறிப்பிடுகையில்... 'சிநேகா சிறந்த நடிகை. 80ஆம் ஆண்டின் பின்னணியில் கதை உருவாகுவதால் எனக்கு நன்கு அனுபவமுள்ள ஹோம்லியான நடிகை தேவைப்பட்டார். உடனே எனக்கு மனதில் தோன்றியவர் சிநேகாதான். ஏந்தவிதமான பாத்திரத்தினையும் லாவகமாக நடித்துக் கொடுக்கக்கூடியவர் சிநேகா...' என்று குறிப்பிட்டார்.

புன்னகைச் செல்வி சிநேகா தற்சமயம் 'பவானி' படத்தினை நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து 'பொன்னர் சங்கர்', 'முரட்டு காளை', 'விடியல்' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இப்படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு 'மாட் டாட்' படத்தில் நடிப்பதற்கு உத்தேசித்துள்ளாராம் சிநேகா.


  Comments - 0

  • raffi Wednesday, 30 March 2011 05:20 AM

    சிநேகா ஒரு குணசித்திர நடிகை ஆனால், தற்போது ?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .