Freelancer / 2024 மார்ச் 31 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பகுதிகளில் நாளை (01) அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக செம்மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேல், தென், வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர இரத்தினபுரி, மொனராகலை, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலால் உணரக்கூடிய அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. R
10 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
1 hours ago