Editorial / 2017 மே 25 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அண்மைக் காலமாக இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிச் சம்பவம், ஐம்பது சதவீதமாக குறைந்துள்ளது” என்று, கடற்றொழில் மற்றும் நீரியல்வளமூல அமைச்சர் மஹிந்த அமரவீர, இன்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கையின் வசம் உள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என, அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், அவர்களின் கோரிக்கைகளை ஏற்று 42 படகுகளை விரைவில் விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தியத் தூதரகத்துக்கு இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளோம்.
எனினும், எங்களது நிபந்தனைகளுக்கு உட்பட்டே படகுகள் விடுவிக்கப்படும். எங்களது நிபந்தனைகளை மறுக்கும் பட்சத்தில், படகுகளை விடுவிக்க மாட்டோம்.
அதேபோல படகுகளை நாங்கள் மீண்டும் வழங்குகின்றோம் என்பதற்காக, இந்திய மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றமாட்டோம் என்று அர்த்தமில்லை.
இப்போது, படகுகளைக் கொடுத்தாலும் இலங்கைக் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து அத்துமீறினால், கைது நடவடிக்கை மற்றும் விசைப்படகுகள் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை நாம் தொடர்ச்சியாகக் முன்னெடுப்போம்” என்றும் தெரிவித்தார்.
14 minute ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
1 hours ago
9 hours ago