2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அத்துருகிரியவில் பெட்ரோல் குண்டு வீச்சு

Freelancer   / 2024 ஏப்ரல் 10 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று (09) மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த வர்த்தகருக்கு சொந்தமான வீட்டின் முன் மலர்வளையம் வைக்கப்பட்ட சம்பவத்தில், சந்தேகநபர்கள் மூவர் நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டில் இருக்கும் பாதாள உலக செயற்பாட்டாளர், குறித்த வர்த்தகரிடம் பல தடவைகள் கப்பம் கோரியுள்ளதாகவும், பணத்தை தர மறுத்ததன் காரணமாக அவரை அச்சுறுத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் இருப்பதாக நவகமுவ பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மஹரகம பமுன்வ பிரதேசத்தில் பாரிய ஆடைத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வரும் இந்த கோடீஸ்வர வர்த்தகர் மேலும் பல ஆடைத் தொழிற்சாலைகளை வைத்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X