George / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 10:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், களனிகம பிரதேசத்தில் நுழைவாயிலுக்கு சேதம் ஏற்படுத்தி, துரத்தி வந்த பொலிஸ் அதிகாரியின் மோட்டார் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி தப்பிச் சென்ற மோட்டார் வாகனத்தின் சாரதி, சட்டத்தரணி ஊடாக சரணடைந்துள்ளதாக பண்டாரகம பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர், மோட்டார் வாகனம் புதுப்பிக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்கள் உள்ளதாக பொலிஸார் கூறினர்.
சந்தேகநபர், பாணந்துறை, மகவில பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் ஓய்வுப்பெற்ற விமானப்படை வீரர் என்றும் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை ஹொரணை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.
54 minute ago
3 hours ago
14 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
3 hours ago
14 Jan 2026