2021 ஜூன் 16, புதன்கிழமை

அனோமாவின் உயிருக்கு ஆபத்து ; ஜனநாயக தேசிய முன்னணி அச்சம்

Super User   / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுக்கு அடுத்த இலக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அமைச்சர் ஒருவர் அண்மையில் வெளியிட்ட கருத்து இவ்வாறானதோர் கேள்வியை எழுப்பியுள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அனோமா பொன்சேகா தன்னுடைய கணவரின் நிலையை கவனிப்பதை விட,தன்னுடைய பாதுகாப்பு நலனை கருத்தில் கொள்ளவேண்டும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும அண்மையில் ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூறியிருந்தார்.

அமைச்சரின் இக்கூற்று சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும்,அனோமாவின் உயிருக்கு ஆபத்தை அரச தரப்பு ஏற்படுத்திவிட்டு,மூன்றாவது சக்தியொன்றின் மீது குற்றத்தை சுமத்தக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அவ்வறிக்கையில் மேலும்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .