2021 ஜூன் 16, புதன்கிழமை

அமைச்சர் முரளிதரன் விரைவில் கிழக்குப்பல்கலைக்கழகம் விஜயம்

Super User   / 2010 மார்ச் 17 , பி.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

தேசிய ஒருமைப்பாடு மற்றும் மீளிணக்கப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான தூதுக்குழுவொன்று நாளை அல்லது மறுநாள் கிழக்குப்பல்கலைக்கழகம் செல்லவுள்ளது.

உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால,உயர் கல்வியமைச்சின் உயர் அதிகாரிகள் ஆகியோரும் இத்தூதுக்குழுவில் இடம்பெறவுள்ளனர்.

கிழக்குப்பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ள முறைக்கேடுகள்,மாணவர்களின் உணவு,தங்குமிட பிரச்சினைகள் ஆகியன குறித்து இக்குழுமினர் ஆராயவுள்ளனர் என அமைச்சின் ஊடகச்செயலாளர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு இன்று தெரிவித்தார்.

கடந்த 12 ஆம் திகதிமுதல் பல்வேறு காரணங்களை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கிழக்குப்பல்கலைக்கழக பிரச்சினைகளை முடிவுக்குக்கொண்டுவருமுகமாக நேற்று உயர்கல்வியமைச்சில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வழிகாட்டுதலின் பேரில் அமைச்சர் விஸ்வ வர்னபாலவுடன் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றது.

இதனைத்தொடர்ந்து,எதிர்வரும் திங்கட்கிழமை 22 ஆம் திகதி பல்கலைக்கழக நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

மாணவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கென்று குழுவொன்றும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .