2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அரசுடன் பேச்சு நடத்த கூட்டமைப்பு காத்திருப்பு-சுரேஷ் பிரேமச்சந்திரன்

Super User   / 2010 ஏப்ரல் 21 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்தின் அழைப்பிற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருப்பதாக கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஏற்றுக்கொள்ளக்கூடியதான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முயற்சிகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாகவும் அவர் கூறினார். இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு  தயார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதற்கான பதில் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .