2021 ஜூன் 14, திங்கட்கிழமை

அரசாங்க இணையத்தளங்கள் ஆராயப்படும்

Gavitha   / 2017 மே 19 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் அரசாங்கத்தின் அனைத்து இணையத்தளங்களும் பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக, தகவல் தொடர்பாடல் முகவராண்மை தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியிலுள்ள அரசாங்க இணையத்தளங்கள் அனைத்தும், பைபர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமையையடுத்தே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நடவடிக்கை, இலங்கை கணினி அவசர தயார்நிலை பிரிவு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்துடனும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சுடனும் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்க இணையத்தள‍ங்களின் பாதிப்பு மதிப்பீடுகள் மற்றும் அணுகுமுறைகள் போன்றவை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .