2021 ஜூன் 16, புதன்கிழமை

அராலி கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

அராலி கடற்கரையில் நேற்று முன்தினம் பெண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

நடுத்தர வயது மதிக்கத்தக்க இந்தச் சடலம் வேறொரு இடத்திலிருந்து அராலிக் கடற்கரையில் கரையொதுங்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த இடத்திற்கு சென்று சடலத்தைப் பார்வையிட்ட மல்லாகம் நீதவான், பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு சுன்னாகம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .