Freelancer / 2024 மார்ச் 13 , பி.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
12ஆம் திகதி பிற்பகல் மெல்பேர்ன் மில்லியனர்ஸ்ரோ வீதியில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Doyne Caspersz மற்றும் அவரது மனைவி Marlene Caspersz ஆகியோரே இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
70 மற்றும் 80 வயதுக்குட்பட்ட இவர்களது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளிவராத போதிலும், இந்த மரணத்தில் சந்தேகம் இல்லை என பொலிஸார் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இவர்களது மரணத்திற்கு அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவும் அதிக வெப்ப அலை காரணம் என்றும் கூறப்படுகின்றது.
உயிரிழந்த தம்பதியினர் சுமார் இருபத்தைந்து வருடங்களாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர், அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை இன சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் உப தலைவராகவும் Doyne Caspersz கடமையாற்றியுள்ளார். R
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago