2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து புதிய செய்தி

Freelancer   / 2024 மார்ச் 11 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான இரண்டாம் கட்டத்துக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இந்த மாதம் 15ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

தற்போது, சுமார் 2 மில்லியன் பயனாளிகள் அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இரண்டாவது கட்டத்தின் கீழ் அந்த எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக இந்த ஆண்டுக்கான பாதீட்டில் 205 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .