2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஆனமடுவ இளைஞர் படுகொலை ; நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

Super User   / 2010 ஏப்ரல் 14 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ தேர்தல் தொகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து இன்று நன்பகல் நூற்றுக்கணக்கான மக்கள் வீதி மறியல் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

புத்தளத்திலிருந்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு இத்தகவலை தெரிவித்தன.

கொலையாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி புத்தாண்டு தினத்தைக்கூட கொண்டாடுவதை நிறுத்திவிட்டு சுமார் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

நேற்று இரவு  ஆனமடு தேர்தல் தொகுதியில் உள்ள பரமாகந்த,இஹலதிவுல்புர என்னுமிடத்தில் சுமார் 7.45 மணியளவில்  இளைஞர் ஒருவர்  (19 வயது)வெட்டப்பட்டும்,தாக்கப்பட்டும் கொல்லப்பட்டுள்ளார்.

புத்தலம் - குருணாகல் பிரதான வீதியில் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது.

இதேவேளை, புத்தளம் தொகுதி பொலீஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலீஸ் குழு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .