2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஆளும் கட்சி வேட்பாளர் ஹெலிகொப்டரில் சென்று துண்டுப்பிரசுரம் விநியோகம்

Super User   / 2010 ஏப்ரல் 03 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட வேட்பாளரும்,பிரதி சுகாதார அமைச்சருமான ஜயரத்ன ஹேரத் ஹெலிகொப்டரில் சென்று தேர்தல் பிரசார நடவடிக்ககளை இன்று மேற்கொண்டார்.

தன்னுடைய தேர்தல் பிரசார துண்டுப்பிரசுரங்களை விமானப்படைக்குச்சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டரில் சென்று விநியோகித்ததாக அவரது அலுவலகம் டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தது. 

பிரதி அமைச்சர் ஜயரத்ன ஹேரத் இரண்டு மணி நேரத்துக்கு ஹெலிகொப்டரை வாடகைக்கு அமர்த்தியிருந்தார்.

ஒரு மணித்தியாலத்திற்கு 2150 அமெரிக்க டாலர் வாடகை செலுத்தப்பட்டதாக க்கூறப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .