2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஆளும் சுதந்திர முன்னணிக்கு எதிராக நடிகை கீதா குமாரசிங்ஹ வழக்கு தாக்கல்

Super User   / 2010 ஏப்ரல் 14 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல நடிகை கீதா குமாரசிங்ஹ தான் போட்டியிட்ட ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

பிரிட்டிஷ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் சிங்கள மொழியிலான சங்தேஷய செய்திச்சேவைக்கு அளித்த பேட்டியில் வாக்குகல் எண்ணப்படும்பொழுது தான்  முன்னணியில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

காலி மாவட்டத்தில் ஆளும் கட்சியின் சார்பில் கீதா குமாரசிங்ஹ போட்டியிட்டிருந்தார்.

தன்னுடைய கட்சியின் தலைவர்களாலேயே தனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாகவும்,அவர்களது பெயர்களை தற்போது வெளியிட முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

காலி மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த முத்துஹெட்டிகம அதி கூடிய விருப்பு வாக்குகளைப்பெற்றிருந்தார்.

முன்னாள் அமைச்சரும்.முதன்மை வேட்பாளருமான பியசேன கமகே தெரிவுசெய்யப்பட்டவர்களில் ஐந்தாவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .