2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற சட்டவிரோத குடியேற்றவாசிகள் கைது

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த 25 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

20 தமிழர்களையும், ஐந்து சிங்களவர்களையும் உள்ளடக்கிய மொத்தம் 25 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், இவர்கள் உடப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

இவர்களிடமிருந்து வரைபடங்கள் போன்றனவும் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி குறிப்பிட்டார். 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .