2021 மே 15, சனிக்கிழமை

இத்தாலியில் இருந்து வந்த இருவருக்கு கொரோனா?

Editorial   / 2020 பெப்ரவரி 28 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சந்தேகிக்கப்படும் இலங்கையர்கள் இருவர், அங்கொட - ஐடீஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய இருவரே, இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனரென, குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார்.

தற்போது. இவ்விருவரதும் இரத்த மாதிரிகள், பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

இவ்விருவரும், இருமல் மற்றும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என்றும், வைத்திய பணிப்பாளர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .