2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இந்துக்களின் மகா சிவராத்திரி விரதம் நாளை அனுஷ்டிப்பு

Super User   / 2010 மார்ச் 12 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்துக்களின் மகா சிவராத்திரி விரதம் நாளை அனுஷ்டிக்கப்படுகிறது.

மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு, ஆலயங்கள் தோறும் நான்கு ஜாமகாலப் பூசை வழிபாடுகள் நடைபெறும்.

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் காலையில் நீராடி சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு ஜாமகாலப் பூசை வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும்.

அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி  விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.

இலங்கையில் திருக்கேதீஸ்வரம் கோவிலிலேயே சிவராத்திரி விரதம் விசேடமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .