2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இந்திய வெளியுறவுச்செயலாளர் முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சு?

Super User   / 2010 மார்ச் 06 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE  இந்திய வெளிவிவகாரச்செயலாளர் நிரூபமா ராவ் தமது இலங்கை விஜயத்தின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து உறுதி செய்வதற்காக தமிழ்மிரர் இணையதளம் அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹஸன் அலியுடன் தொடர்புகொண்டது.

தற்போது அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்டுள்ள  ஹஸன் அலி, தமக்கு இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை  எனக்கூறினார்.

எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுமானால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் கண்டியிலும்,தவிசாளர் பஷீர் சேகு தாவூத் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .