2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இன்று சர்வதேச மே தினம்

Super User   / 2010 மே 01 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்


உலகளாவிய ரீதியில் இன்று தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.பல நாடுகள் தொழிலாளர்களின் மேம்பாட்டை வலியுறுத்தும் வகையில் பொதுக்கூட்டங்கள்,ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்துகின்றன.

மேதினம்  சர்வதேச விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் சமூகத்தின் ஒரு நாளைக்கு எட்டு மணித்தியாலம் வேலை செய்யும் போராட்டத்தின் காரணமாக  அமெரிக்காவில் 1886ஆம் ஆண்டில் முதலாவது மேதினம் கொண்டாடப்பட்டது.120ஆவது சர்வதேச மேதினம் இன்று கொண்டாடப்படுகிறகு.

இலங்கையில் முதலாவது மேதினம் 1934 ஆம் ஆண்டு இடம்பெற்றது.ஏ.ஈ குணசிங்ஹ தலைமையிலான அகில இலங்கை தொழிலாளர் சம்மேளனம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை தன்னுடைய 76 ஆவது மேதினத்தை கொண்டாடுகின்றது.

1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்கம் இரண்டாவது உலக மகா யுத்தத்தை முன்னிட்டு மேதினத்துக்கு தடை வித்தித்தது.

1956 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டரநாயக்கா மே தினத்தை விடுமுறை தினமாக இலங்கையில் பிரகடனம் செய்தார்.

1965 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மேதினக்கொண்டாட்டம் தடை செய்யப்பட்டது. 

1969 ஆம் ஆண்டு முதல் தடவையாக மே தினம் ஏப்ரல் 30 ஆம் திகதி கொண்டாடப்பட்டது.மே முதலாம் திகதி வெசாக் போயா தினம் கொண்டாடப்பட்டதே இதற்குக்காரணமாகும்.

1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கிளர்ச்சி காரணமாக மே தினக்கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டன.

1987 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற புறக்கோட்டை குண்டுவெடிப்பு காரணமாக  மேதின கொண்டாட்டங்கள் ரத்துச்செய்யப்பட்டன.

1993 ஆம் ஆண்டில் மேதின ஊர்வலத்தின் போது ஜனாதிபதி ஆர்.பிரேமதாச படுகொலை செய்யப்பட்டார்.

2007 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாக மேதினம் ஏப்ரல் 300ஆம் திகதி கொண்டாடப்பட்டது. மே முதலாம் திகதி வெசாக போயா தினம் அனுஷ்டிக்கப்பட்டமையே இதற்குக்காரணமாகும்.

2010 ஆம் ஆண்டு, இம்முறை  யுத்தத்தின் பின்னரான முதலாவது மே தினமாக கருதப்படுகின்றது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .