2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல்: ஐவர் காயம் ; 34 பேர் கைது

Editorial   / 2020 ஜனவரி 19 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் – செல்லக் கதிர்காமம் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபரணை மற்றும் பாதுக்க ஆகிய பகுதிகளிலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்பகுதி மக்களுடன் மதுபோதையுடன் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த ஐந்து பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .