2021 ஜூன் 19, சனிக்கிழமை

இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை;சாதகமான மீளாய்வு-ஐரோப்பிய ஒன்றியம்

Super User   / 2010 மார்ச் 15 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்குவது  தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் சாதகமான முறையில் மீளாய்வு செய்யவுள்ளதாக இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரி வேர்னாட் சாவேஜ் தெரிவித்துள்ளார்.

டெயிலிமிரரிற்கு வழங்கிய விசேட பேட்டிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இந்த வாரம் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக நான்கு பேரைக் கொண்ட தூதுக் குழுவொன்று பிரஸல்லிற்கு பயணமாகவுள்ளதாகவும் வேர்னாட் சாவேஜ் குறிப்பிட்டார்.
 
திறைசேரிச் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர தலைமையில் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், வெளிவிவகாரச் செயலாளர் ரோமேஷ் ஜயசிங்க, நீதி அமைச்சுச் செயலாளர் சுகத கம்லத் ஆகியோரே பிரஸல்லிற்கு பயணமாகவுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .