2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கையர் 8 பேருக்கு அரசியல் புகலிடம் ; ஆஸ்திரேலிய அரசு அனுமதி

Super User   / 2010 ஏப்ரல் 02 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் புகலிடம் கோரிச் சென்ற 8 இலங்கையர்களின் வீசா அனுமதி ஏற்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜா உரிமை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எட்டு இலங்கையர்கள் உட்பட மேலும் 41 பேரின் வீசா அனுமதி ஏற்கப்பட்டிருப்பதாகவும் குடிவரவு மற்றும் பிரஜா உரிமை திணைக்களம் கூறியதாக ஏ.பி.சி செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்களில் 37 பேருக்கு இன்று வீசா அனுமதி வழங்கப்படவிருப்பதாகவும், இவர்களில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் ஆஸ்திரேலிய குடிவரவு மற்றும் பிரஜா உரிமை திணைக்களம் கூறியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .