2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

இலங்கை - இந்திய அதிகாரிகள் கலந்துரையாடல்

Freelancer   / 2024 மார்ச் 13 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஸ்ரீ புபிந்தர் சிங் பல்லாவின் தலைமையிலான  தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.  

நாட்டில் உள்ள மீள்புதுப்பிக்கத்தக்க முதலீடுகளுக்கான வாய்ப்புகள் தொடர்பில்  இந்திய ஆய்வாளர்களுக்கும் இலங்கையின் அதிகாரிகளுக்கும் இடையே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்சக்தி , எரிசக்தி அமைச்சில் நேற்று காலை இடம்பெற்ற தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒத்துழைப்பு, புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள், அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .