2021 ஜூன் 16, புதன்கிழமை

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சிகிச்சைக்கு வந்த இந்திய வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை

Super User   / 2010 மார்ச் 26 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்து ஆயுர்வேத வைத்தியமுறையில் சிகிச்சை பெற்றுச்சென்றமைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை கௌதம் கம்பீர்,ஆசிஸ் நெக்ரா ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளது.

தமக்குத்தெரியாமல் இந்தப்பயணத்தை இந்திய கிரிக்கெட் வீரர்கள் மேற்கொண்டுள்ளதாக கட்டுப்பாட்டுச்சபை கருதுவதாக இந்தியச்செய்திகள் கூறுகின்றன

.இலங்கை கிரிக்கெட் வீரர் டில்ஷானின் வேண்டுகோளின்பேரிலேயே இவர்கள் இலங்கை வந்து,ஜனாதிபதியையும் சந்தித்துவிட்டு நாடுதிரும்பியிருந்தனர்.

கம்பீர்,நெக்ரா இருவரிடமும் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருப்பதாகவும் இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .