2026 மார்ச் 19, வியாழக்கிழமை

’உடன்படிக்கையை பேணுவது அவசியம்’

Freelancer   / 2024 ஜூன் 15 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையை தொடர்ச்சியாக பேணுவது அவசியமென சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

செயற்றிட்ட இலக்குகளை அடைவதற்கான அவதானிப்புகள் மற்றும் மாற்று முன்மொழிவுகள் குறித்து அறிய நாம் தயாராக உள்ளோம். எவ்வாறாயினும், அவை சாத்தியமானவையாகவும் செயற்றிட்ட காலப்பகுதிக்குள் அடையக்கூடியவையாகவும் காணப்பட வேண்டும்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையை முன்கொண்டு செல்ல போதுமான முன்னேற்றம் காணப்படுகின்றது.

 இலங்கையின் தற்போதைய சீர்த்திருத்தங்களினால் பொருளாதாரத்தின் ஆரம்பக்கட்டமைக்கு சீரடைந்துள்ளது. நிதி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் அதிகாரிகளின் வலுவான செயல்பாட்டை நிர்வாக இயக்குநர்கள் பாராட்டினர்.

பொருளாதாரம் மீட்சிப்பெற்றுள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ளது. வருவாய் சேகரிப்பு மேம்பட்டுள்ளது. நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ஸ்திரமடைந்துள்ளது என்றார். (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .