Kogilavani / 2017 ஜூன் 09 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை பிளான்டேசனுக்கு சொந்தமான அகரவத்தத் தோட்டத்தில், வெள்ள நிவாரணம் என்ற பெயரில் தம்மிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக, தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்தவித முன்னறிவித்தலும் இன்றி, தொழிலாளர்களிடம் இந்த பணம் அறிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அந்நிலையில், மக்களிடம் வசூலிக்கப்பட்ட 500 ரூபாய் பணத்தை ஓரிரு நாட்களில் திருப்பிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தோட்ட அதிகாரி தெரிவித்துள்ளார். எனினும், எவ்வித அனுமதியும் இன்றி தம்மிடம் பணம் வசூலித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது கண்டிக்கத்தக்க விடயம் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள பட்டியலில் “ஏனையவை” என்ற பெயர் குறிப்பிடப்பட்டு இவ்வாறு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .