2021 ஜூன் 16, புதன்கிழமை

ஐ.தே.கவை மறுசீரமைக்க 5 அம்சம் கொண்ட தீர்வுத்திட்டம் முன்மொழிவு

Super User   / 2010 மே 03 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து கட்ட உபாயங்களை உள்ளடக்கிய தீர்வு திட்டம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர  அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹவிடம் இன்று மாலை கையளித்துள்ளார்.

இத்தீர்வு திட்டத்தின் மூலம் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களை பலப்படுத்த வேண்டும் என்றும் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு உறுப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்யுமாறு கட்சித்தலைமைத்துவத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

மேலும், கட்சியின் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வினைத்திறன் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .