2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஐ.நா செயலாளருக்கு எதிராக இலங்கை அரசு கண்டனம்

Super User   / 2010 மார்ச் 08 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான்கீமூன் ஐக்கிய நாடுகள் சபையின் சட்ட விதிகளை மீறுவதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து  அறிவுறுத்தல் வழங்க விசேட குழுவொன்றை பான்கீமூன் நியமித்துள்ளார். இந்த நிலையிலேயே, இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடொன்றின் உள்விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை பெறுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையை உருவாக்கியவர்கள் எதிர்பார்க்கவிலை எனவும் இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் கூறினார்.

இலங்கை சர்வதேச சட்டம், உள்நாட்டுச் சட்டம் ஆகியவற்றை மீறாத காரணத்தினால், எந்தவித ஆலோசனைக் குழுவையும் அமைக்கத் தேவையில்லை என பான்கீமூனூடனான தொலைபேசி உரையாடலின்போது ஜனாதிபதி கூறியதாக சுற்றாடல், இயற்கைவளத்துறை அமைச்சர் பதாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .